மும்பை:
ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன .
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொயீன் அலி 3 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த உத்தப்பா , ஷிவம் துபேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
உத்தப்பா 50 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மறுபுறம் துபேவும் 46 பந்துகளில் 5 பவுண்டர்கள், 8 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 217 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரூ அணி களம் இறங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்… டி.என்.பி.எல். போட்டி ஜூன் 27-ந் தேதி தொடக்கம்?