புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெறும் கடற்கரை திருவிழாவில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தினசரி ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.புதுச்சேரியின் பொருளாதாரத்தின் ஆணி வேராக உள்ள சுற்றுலாவை மேம்படுத்திட, அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, சுற்றுலா துறை சார்பில் வம்பா கீரப்பாளையத்தில் பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகியவை மேம்படுத்தப்பட்டன.இவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், சுற்றுலாத் துறை சார்பில் இன்று (13ம் தேதி) முதல் 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா நடக்கிறது.இந்த நான்கு நாட்களிலும் காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கு ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்திட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் வகையில், ஏராளமான போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாகனங்களைநிறுத்த கட்டுப்பாடுபோக்குவரத்து எஸ்.பி., மாறன் கூறியதாவது;கடற்கரை திருவிழாவிற்கு வரும் பொது மக்களின் வாகனங்களை நிறுத்த தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.மக்கள் தங்களின் வாகனங்களை பழைய துறைமுகம் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும். செயின்ட் லுாயிஸ் வீதி, துய்மா வீதி மற்றும் புரம்மனேத் ஓட்டல் எதிரிலும், புஸ்சி வீதியில் பழைய சட்டக் கல்லுாரி சந்திப்பில் இருந்து கடற்கரை சாலை வரை எந்த வாகனங்களையும் நிறுத்தக் கூடாது. ரோமன் ரோலண்ட் வீதி, பாரதி பூங்கா நுழைவு வாயில் எதிரில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது. கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்து சரி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement