மதுரை: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா: 16ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிம்பிளாக நடைபெற்று வந்த மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 12 நாள் நடைபெறும் இந்த விழா ஏப்ரல் 5ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற 12-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது
நாளைஇ 13ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
ஏப்ரல் 15ந்தேதி வெள்ளிக்கிழமை – திருத் தேரோட்டமும் (ரத உட்சவம்) நடைபெற உள்ளது.
ஏப்ரல் 16ந்தேதி 2022– சனிக்கிழமை அன்று கள்ளழகர் – தங்கக்குதிரையில் காலை 5.50 முதல் 6.20 மணிக்குள்வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். அன்று இரவு தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவையொட்டி 16ஆம் தேதி சனிக்கிழமை மதுரை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.