பிடதி, : ”பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான் கர்நாடகாவில் கொலைகள் அதிகமாகியுள்ளன,” என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.ராம்நகர் மாவட்டம், பிடதி அடுத்த கீதகானஹள்ளியில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பண்ணை வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் நேற்று செய்தியாளர்களை குமாரசாமி சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:பெங்களூரு கோரிபாளையாவில் சந்துரு என்ற இளைஞரை, உருது மொழி பேசவில்லை என்பதால், அவரை கும்பல் ஒன்று கொலை செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகிறார்.மற்றொரு புறம், பைக் இடித்ததால் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாக போலீஸ் கமிஷனர் கூறுகிறார். ஏன் இந்த குழப்பம்?சமூக விரோதிகள் இருந்தால் அவர்களை சிறையில் தள்ளுங்கள். சர்ச்சை விஷயங்களை பேசாமல் உள்துறை அமைச்சரால், வாயை மூடி கொண்டு இருக்க முடியாதா?பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான் கர்நாடகாவில் கொலைகள் அதிகமாகியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
பிடதி, : ”பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான் கர்நாடகாவில் கொலைகள் அதிகமாகியுள்ளன,” என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.ராம்நகர் மாவட்டம், பிடதி அடுத்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.