சில நாட்கள் முன்பு குழந்தைகள் விரும்பி உண்ணும் சில வகை சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் பயங்கர கிருமி இருப்பதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
தற்போது, அந்த சாக்லேட்டை உண்ட பிரித்தானியக் குழந்தை ஒன்று சோர்வடைந்து போய் படுக்கையில் கிடப்பதைக் காண சகிக்காமல் வேதனையில் ஆழ்ந்துள்ளனர் அதன் பெற்றோர்.
Ferrero என்ற பிரபல நிறுவனம், பெல்ஜியம் நாட்டில் தயாரித்த சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்ற கிருமி இருப்பது தெரியவந்த நிலையில், தனது Kinder chocolate தயாரிப்புகளில் Surprise eggs வகை சாக்லேட்டுகள் உட்பட எட்டு வகை சாக்லேட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இங்கிலாந்திலுள்ள Dorset என்னும் இடத்தில் வாழும் Charlotte Wingfield என்னும் பெண்ணின் மகளான Brooklyn-Mai (3), சமீபத்தில் food poisoning என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டாள். அதைத் தொடர்ந்து மிகவும் சோர்வாகக் காணப்படும் Brooklyn-Mai, ஒரு நாளின் 24 மணி நேரத்தில், 21 மணி நேரமும் தூங்க மட்டுமே செய்கிறாளாம்.
தன் குழந்தை, சால்மோனெல்லா கிருமியால் பாதிக்கப்பட்ட Kinder சாக்லேட் மூலமாகவே கிருமித் தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள Ms Wingfield, யாராவது தங்கள் வீடுகளில் அந்த சாக்லேட்டுகளை வைத்திருந்தால் அவற்றை தூர எறிந்துவிடுமாறு பேஸ்புக் இடுகை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.