புதுடெல்லி:
நாடு முழுவதும் நேற்று 15,65,507 டோஸ்களும், இதுவரை 185 கோடியே 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் உறுதியை காட்டுவதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி திட்டம் என்றும், இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பு வளர்ச்சியால் மத்திய சுகாதாரத்துறை புதிய வரையறைகளை அமைத்து வருவதாகவும் தமது ட்விட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 185 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் கொரோனா தடுப்பூசி பிரச்சார சாதனைகளை குறிக்கும் வகையில் கிராபிக்ஸ் தகவல்களை தமது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டிலுள்ள 130 கோடி மக்கள் காட்டிய உறுதி, புதிய இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.