டிசிஎஸ்-ன் பிரம்மாண்ட திட்டம்.. ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தனர்.

எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் ஊழியர்களை நிறுவனங்கள் அழைக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!

இதற்கிடையில் இன்னும் சில காலாண்டுகளுக்கு அட்ரிஷன் விகிதமானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இது 2023ம் நிதியாண்டின் பிற்பாதியில் குறையத் தொடங்கலாம் எனவும் கூறுகின்றனர்.

அலுவலகம் வரலாம்

அலுவலகம் வரலாம்

இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன், ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வரத் தொடங்கியுள்ளனர். இந்த விகிதம் இனி படிப்படியாக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டின் நடுப்பகுதியில், பல ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவார்கள் என கூறியுள்ளார். .

சம்பள அதிகரிப்பு

சம்பள அதிகரிப்பு

கடந்த 2022ம் நிதியாண்டில் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பானது 6 – 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே 2023ம் நிதியாண்டிலும் இந்த விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் எங்களின் உயர் அதிகாரிகள் உள்பட 50,000 ஊழியர்களுடன் தொடங்குகிறோம். அவர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்தே வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவகத்திற்கு வர தொடங்கியுள்ளனர். இது தொடர்ந்து அதிகரிக்கப்படும். எனவே ஆண்டின் நடுப்பகுதியில் இ ந்த விகிதமானது 80: 20 ஆக இருக்கலாம்.

 

பணிபுரியும் மாடல்
 

பணிபுரியும் மாடல்

தற்போது ஐடி நிறுவனம் 95:5 மாதிரியில் இயங்கி வருகின்றது. எனினும் நிறுவனம் 25 : 25 திட்டத்திலும் நம்பிக்கையாக உள்ளது. தற்போதைய நிலையில் 80: 20 என்ற மாதிரிக்கு திரும்ப வேண்டும். நிறுவனம் அதற்கான முயற்சியினை துரிதப்படுத்தி வருகின்றது.

பணியமர்த்தல்

பணியமர்த்தல்

கடந்த நான்காவது காலாண்டில் 35,209 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. இது ஒரு காலாண்டில் இதுவரை இல்லாத அளவு ஆகும். இதே ஊழியர்களின் மொத்த ஊழியர்களின் விகிதமானது 5,92,195 ஆக இருந்தது. இது வருடத்தில் 1,03,546 பேராக உள்ளது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதமானது 17.4% ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அட்ரிஷன் விகிதமானது அதிகரித்து வருகிறது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

NSE-யில் இப்பங்கின் விலையானது இன்று 0.99% அதிகரித்து, 3733 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 3737.75 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது, 3648.35 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 4043 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3004 ரூபாயாகும்.

BSE-யில் இப்பங்கின் விலையானது தற்போது, 0.93% அதிகரித்து, 3731.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 3737 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது, 3650.50 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 4045.50 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3004.80 ரூபாயாகும்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs டிசிஎஸ்

English summary

TCS’s salary increase plan? return to office plans for employees

TCS’s salary increase plan? return to office plans for employees/டிசிஎஸ் சம்பள அதிகரிப்பு திட்டம்.. எப்போது அலுவலகம் திரும்பலாம்.. மாஸ் திட்டம்!

Story first published: Tuesday, April 12, 2022, 12:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.