பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான
சிம்பு
, குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். சர்ச்சைகள், படங்கள் வர தாமதம் என பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், இவருக்கான ரசிகர் பட்டாளத்தில் என்றுமே குறை ஏற்பட்டது இல்லை
தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் #TamilConnect என்ற ஹேஸ்டாக்கில் ‘
தமிழால் இணைவோம்
‘ என பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதே போல் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதே ட்விட்டை பதிவிட்டுள்ளார்.
அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அவரின் இந்த பேச்சிற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Beast: குவைத், கத்தாரை தொடர்ந்து தமிழகத்திலும் தடை..?: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ என பதிவிட்டிருந்தார். மேலும் பேட்டி ஒன்றில் தமிழ் தான் இணைப்பு மொழி என்றும் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்தே சிம்பு, அனிருத் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் ‘தமிழால் இணைவோம்’ என பதிவிட்டுள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், அண்மையில் சிம்பு ஆஹா ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்துள்ளதாகக் கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவலும் வெளியானது. இந்த சம்பந்தமான புரோமோஷனுக்காக சிம்பு, அனிருத் இருவரும் ‘தமிழால் இணைவோம்’ என பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஹா ஓடிடி தளம்
தமிழில் பல வெப் சீரிஸ் மற்றும் நேரடி படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.