கொழும்பு: பல்வேறு நாடுகளில் வாங்கிய கடன் உட்பட வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடன் கொடுத்த நாடுகள், வங்கிகள் கடனுக்கான வட்டித் தொகை மறு கடனாக வைத்துக் கொள்ளலாம் அல்லது இந்திய ரூபாயில் திருப்பிச் செலுத்த மட்டுமே முடியும் எனவும் அறிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.