தீ பிடித்து எரிந்த ஓலா பைக்.. சிஇஓ எடுத்த திடீர் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவின் எதிர்காலம் எனப் போற்றப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் கண்டு தற்போது மக்கள் பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஓலா, ஒகினாவா, ப்யூர் EV, ஜிதேந்திரா EV என முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து நாட்டின் பல பகுதிகளில் தீ பிடித்து எரிந்துள்ளது.

3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!

இந்த நிகழ்வின் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்பும் பலர் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் முக்கியமான முடிவை அறிவித்துள்ளார்.

 ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

இந்தியாவில் குறைந்த நேரத்தில் அதிகப்படியான இரு சக்கர வாகனங்களுக்கான புக்கிங் பெற்ற நிறுவனம் என்ற பெருமைக்கு உரிய ஓலா நிறுவனத்தின் பைக் புனேவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தீ பிடித்து எரிந்தது நாடு முழுவதும் பரபரப்பானது. இதைத் தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ முக்கியமான முடிவை எடுத்துள்ளார், இதன் மூலம் மொத்த நிர்வாகப் பொறுப்பும் மாறுகிறது.

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

இந்தச் சம்பவத்திற்குப் பின்பு ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், இனி மொபிலிட்டி வர்த்தகப் பிரிவில் தினசரி நிர்வாகப் பணிகளில் இருந்து தான் முழுமையாக விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்கள்
 

எலக்ட்ரிக் வாகனங்கள்

மேலும் இனி வரும் காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் இன்ஜினியரிங், ப்ராடெக்ட், டீம் பில்டிங் ஆகியவற்றிலும், ஓலா நிறுவனம் புதிதாகத் துவங்கியுள்ள குவிக் காமர்ஸ் வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தைத் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 அருண் ஜிஆர்

அருண் ஜிஆர்

இதைத் தொடர்ந்து பாவிஷ் அகர்வால் செய்து வந்த தினசரி பணிகளை ஓலா குரூப்-ன் தலைமை நிதியியல் அதிகாரியான அருண் ஜிஆர் நிர்வாகம் செய்ய உள்ளார். அருண் ஜிஆர் தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாகவும், நிதியியல் சேவை பிரிவான ஓலா பைனான்சியல் சர்விசஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

யார் இந்த அருண் ஜிஆர்

யார் இந்த அருண் ஜிஆர்

வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தில் 8 வருடம், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் 8 வருடம் பணியாற்றிய அருண் ஜிஆர் கடந்த ஆண்டு மே மாதம் தான் ஓலா நிறுவனத்தில் சேர்ந்தார். வெறும் ஒரு வருடத்தில் அருண் ஜிஆர் ஓலா குழுமத்தின் சிஇஓ பதவியின் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.

பாவிஷ் அகர்வால் திட்டம் என்ன

பாவிஷ் அகர்வால் திட்டம் என்ன

பாவிஷ் அகர்வால் தற்போது ஓலா நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் இரு சக்கர வாகனங்களின் தொழில்நுட்ப மேம்பாடு, எலக்ட்ரிக் கார் திட்டம், குவிக் காமர்ஸ் வர்த்தகம், பேட்டரி R&D மற்றும் தொழிற்சாலை, உலக நாடுகளுக்கு விரிவாக்கம், புனேவில் டெக் சென்டர், பியூச்சர் பவுண்டரி போன்ற பல முக்கியமான திட்டத்தில் பணியாற்றத் திட்டமிட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After Ola bike caught fire, CEO Bhavish Aggarwal step away from daily ops

After Ola bike caught fire, CEO Bhavish Aggarwal step away from daily ops தீ பிடித்து எரிந்த ஓலா பைக்.. சிஇஓ எடுத்த திடீர் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.