தட்சிண கன்னடா : ”கர்நாடகாவில் அமைதி, நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுகிறது,” என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் காதர் தெரிவித்தார்.மங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் மனப்பான்மை கொண்டவர்களை கட்டுப்படுத்த தவறிய முதல்வரும், அவரது நிர்வாகமும் குண்டர்களின் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு மவுனம் சாதித்து வருகின்றனர்.
வகுப்புவாத அடிப்படையில் மாநிலத்தில் பல்வேறு வகையான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் 95 சதவீதம் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால், மோசமான மனநிலை கொண்ட சிலரால் சீர்குலைக்கப்படுகிறது.வகுப்புவாத சக்திகளை முதல்வர் தடுக்க வேண்டும். வகுப்புவாதத்தால் மக்கள் பொறுமை இழக்கக்கூடாது. இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.
தட்சிண கன்னடா : ”கர்நாடகாவில் அமைதி, நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுகிறது,” என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் காதர் தெரிவித்தார்.மங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் அமைதி,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.