நாளந்தா:
பீகார் மாநிலம் நாளந்தா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. எனினும் இதில் யாரும் காயம் அடையவில்லை.
உடனடியாக அங்கிருந்த போலீசார் நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். வெடிகுண்டை வீசியதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக பாட்னாவிற்கு அருகிலுள்ள பக்தியார்பூரில் கடந்த மாதம் மார்ச் 27ந் தேதி சுதந்திரப் போராட்டத் தியாகியின் சிலைக்கு நிதிஷ்குமாரை மலர் தூவி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை தாக்கினார்.
இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பீகார்
முதல்வரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடு அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளது.