புதுடில்லி:’கொரோனா தடுப்பூசி இரண்டாவது ‘டோஸ்’ மற்றும் ‘பூஸ்டர் டோஸ்’ போடுவதற்கான காலத்தை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்’ என ‘சீரம்’ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா கூறியதாவது: கொரோனா வைரசின் உருமாறிய வகைகள் புதிது புதிதாக வருகின்றன. இதையடுத்து மக்களின் பாதுகாப்பிற்காக கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான இடைவெளியை தற்போதைய ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்.
இதேபோல ‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கான இடைவெளியும் ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும். பல நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது. இதனால் வெளிநாடு செல்வோர் தேவையின்றி காத்திருப்பது தவிர்க்கப்படும், என்றார்.
புதுடில்லி:’கொரோனா தடுப்பூசி இரண்டாவது ‘டோஸ்’ மற்றும் ‘பூஸ்டர் டோஸ்’ போடுவதற்கான காலத்தை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்’ என ‘சீரம்’ நிறுவனம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.