கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இதர ஆயில் நிறுவனங்கள் சார்பாக பெட்ரோலிய பாதுகாப்பு குறித்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஜெகதீப் தன்கார் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஆயில் விலை உயர்வு குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு விலை உயர்வுக்கும் பொதுமக்கள் இதனை பயன்படுத்துவதை குறைப்பது மட்டுமே விலை உயர்வுக்கு எதிரான சிறந்த மாற்றாக இருக்கும். பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியானது நாட்டின் வளங்ககளை வற்றச்செய்வதால் அதன் பயன்பாட்டை குறைப்பது என்பது பூமிக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மிகவும் உதவும். பெட்ரோலிய பொருட்கள் புதுப்பிக்கப்பட முடியாதவை என்பதால் மீண்டும் அவற்றை மீண்டும் ஈடுசெய்வதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகும். பணக்காரர்களால் இத்தகைய பொருட்களின் வெளிப்படையான நுகர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்க வேண்டும்’ என்றார்.