ஸ்மார்ட்போன் உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone-களுக்கு தனி இடம் உண்டு. ஒரு முறையேனும் ஐபோன் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் பயனர்களிடத்தில் உள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள ஐபோன் 14 குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துவருகிறது.
தற்போது புதிய ஐபோன் வடிவமைப்பு குறித்த புகைப்படமும், விலை விவரங்களும் லீக்காகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக ஆறு மாதங்களுக்கு குறைவான நாள்களே உள்ளன.
இப்போது, கசிந்த தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 விலையை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. பிரபலமான டிப்ஸ்டர் LeaksApplePro தனது ட்விட்டர் பதிவில் வெளியாக இருக்கும் ஐபோன் 14 மாடலின் விலைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் தனது புதிய ஐபோனுக்கான விலையை அதிகரிப்பதற்கு என்னென்ன காரணங்கள் கூறி நியாயப்படுத்தும் என்பதையும் அப்பதிவு விளக்குகிறது.
ஸ்டிக்கரை மாற்றி ஒப்போ போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறதா ஒன்பிளஸ்!
ஆப்பிள் ஐபோன் 14 விலை (iPhone 14 Price in India)
ஐபோன் 14 ப்ரோ தொடக்க விலை $1099 இந்திய மதிப்பில் ரூ.83,000 ஆக இருக்கலாம் என்றும், ப்ரோ மற்றும் ப்ரோ அல்லாத பதிப்பின் விலைக்கு இடையே $200 டாலர்கள் அதாவது ரூ.15,000 வித்தியாசம் இருக்கும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ப்ரோ மாடல்களுக்கு ஆப்பிள் இன்னும் அதிக விலை கொடுக்கக்கூடும் என்பதால், கணிக்கப்பட்ட விலை சிறந்ததாக இருக்கும் என்று ஆறுதல் அடையலாம். கிடைத்த தகவல்களின் படி, புதிய ஐபோன் ஸ்மார்ட்போன் தொகுப்பில் iPhone 14 மலிவான மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.
காரணம் புதிய தொகுப்பில் ஆப்பிள் நிறுவனம் மினி மாடலை நிறுத்தியுள்ளது. iPhone 13-ஐப் போலவே ஐபோன் 14 சுமார் $799 டாலர் அதாவது ரூ.60.000 ஆக இருக்கும். ஐபோன் மினி மாடல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வந்த நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இதற்கு பதிலாக, ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 14 மேக்ஸ் மாடலை அறிமுகப்படுத்துகிறது.
iPhone 14 எதிர்பார்க்கப்படும் விலையை இங்கே பாருங்கள்
iPhone 14 விலை – $799 / ரூ.60,000 (iPhone 13: $799 / ரூ.60,000)iPhone 14 மேக்ஸ் விலை – $899 ரூ.68,000 (iPhone 13 Mini: $699 / ரூ.53,000)iPhone 14 Pro விலை – $1099 / ரூ.83,000 (iPhone 13 Pro: $999 / ரூ.76,000)iPhone 14 Pro Max விலை – $1199 / ரூ.91,000 (iPhone 13 Pro Max: $1099 / ரூ.83,000)
120W சார்ஜர்; மூன்று 50MP கேமரா – மிரட்ட வரும் சியோமி 12 ப்ரோ 5ஜி!
விலைகள் அதிகரிக்கப்பட்டாலும், புதிய அம்சங்களை மேற்கோள் காட்டி ஆப்பிள் நிறுவனம் விலை அதிகரிப்பை நியாயப்படுத்தும் எனவும் டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் A16 பயோனிக் சிப்செட் பயன்படுத்தப்படும் என்றும், ப்ரோ மாடல்களில் இந்த சிப்பிகள் A16 Pro குறிப்பிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டும் இல்லாமல், இதில் ஒரு மாடல் அலுமினியம் மெட்டலால் கட்டமைக்கப்படும் என்றும், மற்றவை அனைத்தும் ஸ்டெயில்லெஸ் ஸ்டீலால் ஆன வடிவமைப்பை பெறும் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், இதன் கேமராக்களில் LiDAR ஸ்கேனர் ஆதரவு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.