தட்சிண கன்னடா : மங்களூரில், நாட்டிலேயே இரண்டாவது ஆயுஷ் விளையாட்டு மருத்துவ மையம் அமைக்க, 2.5 கோடி ரூபாயை ஆயுஷ் துறை ஒதுக்கியுள்ளது.விளையாட்டு துறையில் வீரர்கள் சிறந்து செயல்பட, மத்திய அரசு, ‘தேசிய ஆயுஷ் திட்டம்’ கீழ் பல பணிகளை செய்து வருகிறது. அதில், விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க, கேரள மாநிலம் திருச்சூரில், ஆயுஷ் விளையாட்டு மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
அதேபோல, கர்நாடகாவிலும் அமைக்க வேண்டும் என மாநில அரசு சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, தட்சிண கன்னடா மங்களூரில், 2.5 கோடி ரூபாய் செலவில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, ‘ஆயுஷ் விளையாட்டு மருத்துவ மையம்’ அமைக்க, ஆயுஷ் துறை ஒப்புதல் அளித்துள்ளது.மங்களூரில் அமையும் மையத்தில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி சிகிச்சையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இம்மையம், மங்களூரில் ‘ஹாட் ஹில்’லில் உள்ள ஆயுஷ் மையம் அல்லது அரசு வென்லாக் மருத்துவமனை வளாகத்திலுள்ள ஆயுஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் துவக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Advertisement