ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால் ஜேர்மனியால் எத்தனை நாட்கள் வரை சமாளிக்க முடியும் என்ற விவரத்தை நாட்டின் எரிசக்தி கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் Klaus Mueller வெளிப்படுத்தியுள்ளார்.
ஜேர்மன் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த Klaus Mueller, தற்போதே ரஷ்யா விநியோகத்தை நிறுத்தினால் ஜேர்மனியின் எரிவாயு இருப்பு கோடையின் பிற்பகுதியில் தீர்ந்துவிடும் என கூறினார்.
அதாவது, ஜேர்மனியின் எரிவாயு இருப்புக்கள் குறைந்த பட்சம் கோடையின் இறுதி வரை நீடிக்கும்.
சொந்த நாட்டிற்குள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த தயாராகும் ரஷ்யா! உளவுத்துறை பரபரப்பு தகவல்
தற்போதைய இருப்பு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட சற்று சிறப்பாக இருப்பதாகவும் Klaus Mueller கூறினார்.
முன்னதாக, ரஷய் எரிசக்தியை சார்ந்திருப்பதை குறைக்காததற்கு ஜேர்மனி உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மீண்டும் விமர்சித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த கட்ட பொருளாதார தடைகளில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதை இணைக்குமாறு ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.