அகமதாபாத்: நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஸ்ரீ ராமநவமி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 10 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
தலாப் சவுக் மசூதியில் ஸ்ரீ ராமநவமி ஊர்வலம் நடந்த போதுஇரு பிரிவினர் கல்வீசித் தாக்கிகொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
குஜராத்தின் ஹிம்மத்நகரில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது 2 பிரிவினர் மோதிக் கொண்டனர். அங்கு வந்த போலீஸ் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாட் நகரில் நடந்த ஊர்வலத்தின்போது ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், தடியடிநடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா, ஷிப்பூர், கர்கோனிக் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் சிலர் கற்களை வீசியதால் வன்முறை வெடித்தது. அங்கும்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.
இதேபோல் ஜார்கண்ட் மாநிலம்லோகர் டகாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கல்வீச்சு சம்பவம் நிகழ்த்தப்பட்டதால் பலர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.
– பிடிஐ