விடிந்தும் விடியாமலும் வீட்டை விட்டு கிளம்பிய ஐஸ்வர்யா: காரணம் 'காதல்'

ஐஸ்வர்யா
ரஜினிகாந்துக்கு அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் செல்வது என்றால் மிகவும் பிடிக்கும். சைக்கிள் மீதான தன் காதலை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு அவர் சைக்கிளிங் சென்றிருக்கிறார். அப்பொழுது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருக்கிறார்.

அதை பார்த்த ரஜினி ரசிகர்களோ, சூப்பர். நீங்கள் சந்தோஷமாக இருப்பது போன்று தலைவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.

மற்றவர்களோ, விளம்பரம் தேடியது போதும். சும்மா சும்மா புகைப்படங்களை வெளியிட வேண்டாம்.

ஊர், உலகத்துல நீங்க மட்டும் தான் சைக்கிளிங் செல்வது, யோகா, ஒர்க்அவுட் செய்வது போன்று புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

ஐஸ்வர்யா தான் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக்கொள்ளவே இப்படி அடிக்கடி தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தனுஷை கடுப்பேற்றத் தான் ஐஸ்வர்யா சமூக வலைளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் ஒருபக்கம் குமுறுகிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை 3 படங்களை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். மேலும் ஒரு இந்தி படத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல இரண்டு ‘குட் நியூஸ்’: போட்ரா வெடிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.