ஸ்டிக்கரை மாற்றி ஒப்போ போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறதா ஒன்பிளஸ்!

ஒன்பிளஸ், ஒப்போ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும், சீனாவில் பிபிகே நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களாகும். முதலில் தனியாக தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த
ஒன்பிளஸ்
நிறுவனம் தற்போது, ஒப்போ நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது.

இதன் வெளிப்பாடு, சமீபத்தில் வெளியான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனில் தெளிவாகத் தெரிந்தது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் கொண்டுவரவுள்ளதாக தெரிகிறது.

ஆனால், இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியான ஒப்போ ஃபைண்ட் என் ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போதும், ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு என தனித்துவமான பயனர்கள் இருந்து வந்த நிலையில், ஒப்போவுடன் இணைந்து தற்போது ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருவதால், நிறுவனத்தின் நிலை என்னவாகும் என பயனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஸ்லிம் & ஸ்லீக்கான புதிய ரியல்மி லேப்டாப் – இதுல எல்லாமே டாப் ஸ்பெக்ஸ் தான்!

ஒப்போ ஃபைண்ட் என் சிறப்பம்சங்கள்

ஒப்போ Find N
வெளிப்புற தொடுதிரை 5.49″ அங்குலமும், உட்புற தொடுதிரை 7.1” அங்குல அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை பெறுகிறது. செயல்திறனை பொருத்தவரை Qualcomm ஸ்னாப்டிராகன் 888 சிப்டெட்டுடன் 2.84 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்துடன் உள்ளது. ஒப்போ ஃபைண்ட் என் 8ஜிபி அல்லது 12 ஜிபி விருப்பத்தேர்வுடன் வருகிறது.

ஒப்போ ஸ்மார்ட்போனில் 256ஜிபி அல்லது 512 ஜிபி சேமிப்புத் திறனை நாம் தேர்வு செய்யமுடியும். ஆண்ட்ராய்டு 12 பதிப்பின் அடிப்படையிலான ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. ஒப்போ Find N, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன், 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 13 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அடிக்குற வெயிலுக்கு ஏசி வேணும் தான் – அதுக்காக இதெல்லாம் தெஞ்சுக்காம இருக்கக் கூடாது!

ஒப்போ Find N ஆனது 33W SuperVOOC ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு, 15W AirVOOC வயர்லெஸ் சார்ஜ் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உடன் 4500mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

ஒப்போ Find N 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தின் விலை 7,699 சீன யுவான் அதாவது சுமார் ரூ.92,100 ஆகவும், 12 ஜிபி ரேம் கொண்ட 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்டின் விலை 8,999 சீன யுவான் அதாவது சுமார் ரூ.1,07,600 ஆகவும் சீனாவில் உள்ளது.

மேலதிக செய்திகள்:

வைஃபை பாஸ்வேர்டை மறந்துவிட்டேன்! எப்படி கண்டுபிடிக்க வேண்டும்?

ஏன் இந்த போன்கள் வெடிக்கிறது? சரியான காரணங்கள் என்ன?

நம்ம சென்னையில் ஆப்பிள் ஐபோன் 13 தயாரிப்பு – விலை குறைய வாய்ப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.