ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார அவர்கள், சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்பம், கமத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அவர் நேற்று, (11) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்கள், பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி அவர்கள் நிராகரித்துள்ளார்.
அதன்படி, பியங்கர ஜயரத்ன அவர்கள் தொடர்ந்தும் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவியில் செயற்படுவார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
11.04.2022