1 மாதத்தில் 50% ஏற்றம் கண்ட அதானி கிரீன் எனர்ஜி.. ஏன் இந்த ஏற்றம்.. வாங்கலாமா?

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கானது 2022ம் ஆண்டில் மல்டி பேக்கர் பங்குகளில் ஒன்றாக இருந்தது. நடப்பு ஆண்டிலும் இதுவரையில் 110% அதிகரித்துள்ளது.

இது 1345 ரூபாயில் இருந்து 2795 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ள நிலையில், இனியும் இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..!

கடந்த 1 மாதத்தில் இந்த பங்கின் விலையானது ஒரு கூர்மையான ஏற்ற இறக்கத்தினை கண்டுள்ளது.

பங்கு விலை ஏற்றம்

பங்கு விலை ஏற்றம்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 1822 ரூபாயில் இருந்து 2795 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதானி கீரின் எனர்ஜியின் பரிமாற்றத் தகவல்கள் படி, நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டுத் திறன் 4வது காலாண்டில் 56% அதிகரித்து, 5410MW ஆக அதிகரித்துள்ளது.

விற்பனை

விற்பனை

இதேபோல எனர்ஜி விற்பனையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 84% அதிகரித்து, 2971 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 1614 மில்லியன் யூனிட்களாக இருந்தது.

இதற்கிடையில் அதானி குழுமம் புதிய முதலீடுகளும் அதிகரித்துள்ளது. அபுதாபியை சேர்ந்த சர்வதேச ஹோல்டிங் நிறுவனம் PJSC (IHC) 3850 கோடி ரூபாய் முதலீடினை செய்யவுள்ளது. இது முதன்மை மூலதனமாகவும் பயன்படுத்தப்படவுள்ளது. இது மேற்கொண்டு இதன் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.

 

கடன் சுமை
 

கடன் சுமை

இது நிறுவனத்தின் கடன் சுமையை குறைக்கவும், கடன் மதிப்பீட்டினை வலுப்படுத்தவும், அதன் மூலம் செலவினைக் குறைக்கவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும் என கூறப்படுகிறது.

அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் 288 மில்லியன் டாலர் கட்டுமான வசதியை உருவாக்கி, அதன் மூலம் 1.64 பில்லியன் டாலர் கட்டுமான வசதி கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.

 

3 சாதகமான காரணிகள்

3 சாதகமான காரணிகள்

ஆக இதுபோன்ற மூன்று சாதகமான காரணிகளுக்கு மத்தியில் தான் இப்பங்கின் விலை, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகின்றது. இது சந்தை மதிப்பில் 10வது மிகப்பெரிய நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது. இது பார்தி ஏர்டெல், கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி , விப்ரோ, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 17.38 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் பட்டியலில் முதலாவதாக உள்ளது.

 இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

NSE-யில் இப்பங்கின் விலையானது இன்று 4.77% அதிகரித்து, 2792.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2955 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது, 2725.50 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2955 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 874.80 ரூபாயாகும்.

BSE-யில் இப்பங்கின் விலையானது 3.25% அதிகரித்து, 2789.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2951.90 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது, 2718.45 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2951.90 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 860.20 ரூபாயாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani green energy shares rise 50% in 1 month, why is this stock rise?

Adani green energy shares rise 50% in 1 month, why is this stock rise?/1 மாதத்தில் 50% ஏற்றம் கண்ட அதானி கிரீன் எனர்ஜி.. ஏன் இந்த ஏற்றம்.. வாங்கலாமா?

Story first published: Tuesday, April 12, 2022, 18:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.