17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட பணவீக்கம்.. ரொம்ப மோசம்!

இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதமானது கடந்த மார்ச் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95 சதவீதமாக உச்சம் தொட்டுள்ளது.

இது உணவு பொருட்கள் விலையானது கணிசமாக அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.

அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..!

இதே நுகர்வோர் விலைக் குறியீடானது (CPI) பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

இதில் உணவு பணவீக்கம் 7.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.85 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரிசர்வ் வங்கியின்(RBI) இலக்கிற்கு மேலாக இருந்து வருகின்றது. மொத்தத்தில் உணவு பொருட்களில் விலை பணவீக்கத்தில் கிட்டதட்ட பாதியாக உள்ளது.

பணவீக்க உச்சம்

பணவீக்க உச்சம்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் விநியோக சங்கிலி பிரச்சனைகள் இருந்து வருகின்றது. இது உலகளாவிய அளவில் சமையல் எண்ணெய் சப்ளையானது, தானிய விலையேற்றம், உர ஏற்றுமதியையும் சீர்குலைத்துள்ளது. இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

 எண்ணெய் விலை உச்சம்
 

எண்ணெய் விலை உச்சம்

இதே பால்ம் ஆயில், பாமலின் எண்ணெய் இந்த ஆண்டு கிட்டதட்ட 50% அதிகரித்துள்ளது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பணவீக்கத்தினால் மிக மோசமான பாதிப்பினைக் கண்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் தங்கள் வாழ்வாதரங்களை இழந்த மக்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தனர். தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் பணவீக்கம் மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை

இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தினை ஆதரிப்பதை விட, பணவீக்கத்தினை சமாளிக்கவும் வட்டி விகிதத்தினை உயர்த்தாமல் அப்படியே வைத்துள்ளது.

மார்ச் 2022ல் சிபிஐ பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், 10 ஆண்டு G- Sec மகசூல் 7.2 சதவீதத்தினை தாண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

inflation soars to 17 month high in march 2022

inflation soars to 17 month high in march 2022/17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட பணவீக்கம்.. ரொம்ப மோசம்!

Story first published: Tuesday, April 12, 2022, 19:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.