இந்தியாவில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 5ஜி டெலிகாம் சேவையை அறிமுகம் செய்ய அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தயாராக உள்ள நிலையில், டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..!
5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் படி அலைக்கற்றைக்கான விலையை நிர்ணயம் செய்வது தான், இதற்கான அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது.
5ஜி அலைக்கற்றை
மத்திய அரசு அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருக்கும் காரணத்தால் இந்த 5ஜி அலைக்கற்றையின் ஏலத்தின் மூலம் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட திட்டமிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கடன் சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விலையை விடக் குறைவான விலையைத் தற்போது நிர்ணயம் செய்துள்ளது.
ஒரு MHZ 317 கோடி ரூபாய்
டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 3300-3670 MHz பேண்டில் இருக்கும் 5ஜி அலைக்கற்றைக்கான விலையை முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விடவும் 35 சதவீதம் குறைத்து 317 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்ய டிராய் பரிந்துரைத்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 2500 MHz பேண்டில் இருக்கும் மீதமுள்ள அலைக்கற்றைகள், புதிதாக 5ஜி சேவைக்காக அறிமுகம் செய்யப்படும் 600 MHz, 3300-3670 MHz மற்றும் 24.25-28.5 GHz பேண்ட் அலைக்கற்றையும் ஏலம் விடப்போவதாக டிராய் அறிவித்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்
மேலும் ஏலத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஏதுவாக 3300-3670 MHz பேண்டில் 10 MHz அலைக்கற்றையும், 24.25-28.5 GHz பேண்டில் 50 MHz அலைக்கற்றை எனச் சிறு சிறு பகுதியாக அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. இதேபோல் ஏலத்தில் அலைக்கற்றையைத் தொடர்ச்சியான முறையில் ஏலம் விடவும் முடிவு செய்யப்பட உள்ளது. இதனால் டெலிகாம் நிறுவனங்கள் பெரும் தொகுதியைக் கைப்பற்ற முடியும்.
விலை வித்தியாசம்
3300-3670 மெகா ஹெர்ட்ஸ் பேண்டின் பிரைம் 5ஜி அலைக்கற்றை ஒரு மெகா ஹெர்ட்ஸுக்கு 317 கோடி ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யலாம் என டிராய் அறிவித்துள்ள நிலையில், கடந்த முறை டிராய் ஒரு மெகா ஹெர்ட்ஸை 492 கோடி ரூபாய் விலையில் நிர்ணயம் செய்யலாம் எனப் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
700MHz அலைவரிசை
மேலும் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான அடிப்படை விலை ஒரு மெகா ஹெர்ட்ஸ் ரூ. 3,927 கோடியாக நிர்ணயம் செய்யப் பரிந்துரை செய்துள்ளது. இது கடந்த முறை முன்மொழியப்பட்டதை விட 40 சதவீதம் குறைவாகும்.
5G spectrum Auction: TRAI recommends over 35% cut in Base price cuts
5G spectrum Auction: TRAI recommends over 35% cut in Base price cuts 5ஜி ஸ்பெக்ட்ரம் விலையை 35% குறைப்பு.. குத்தாட்டம் போடும் ஜியோ, ஏர்டெல்..!