Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜோ பைடன், பிரதமர் மோடி உரையாடல்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடல் நடத்தினார். இதுகுறித்து விளக்கமளித்த மோடி, விரைவில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும். ரஷ்ய அதிபர் புதினை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு வலியுறுத்தினேன். தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலை வருத்தமளிக்கிறது. உக்ரைனின் புச்சா நகரில் நடந்த தாக்குதலில் 400 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. புச்சா தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளவும் இந்தியா வலியுறுத்தியது என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த மோடி கூறினார்.
சசிகலாவுக்காக யாரும் குரல் கொடுக்கமாட்டார்கள்!
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை கேட்டு 1.50 கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. சசிகலாவுக்காக யாரும் குரல் கொடுக்கமாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியின்போது கூறினார்.
Tamil News LIVE Updates:
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி!
ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாகவும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை வேண்டுமென்றே மத்திய அரசு புறக்கணிப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்திய கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு!
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், காலியாக உள்ள இடங்களை உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைனில் எந்த தொழில்நுட்ப பாடப்பிரிவு மற்றும் ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதே மட்டத்தில் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும்.. ராஜபக்சே!
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும். மக்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் என மகிந்த ராஜபக்சே கூறினார்.
“ “
பட்டயப்படிப்பை முடித்த மாணவர்கள் நேரடியாக பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்கை நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
திருவாரூர் குடவாசல் அருகே அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை’ அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் என சசிகலா பேச்சு!
தமிழ்நாடு அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி அங்கு அரசு கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில்’ எம்.எல்.ஏ கேள்விக்கு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதிலளித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி, கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை, சிபிஐ எகிப்தில் இருந்து இந்தியா அழைத்து வந்தது.
2026ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியா மண்டபத்தை அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதை கண்டித்து நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் உள்பட 75 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் அருகே தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில்’ 5 பேர் உயிரிழந்தனர்.
அமைச்சர், எம்.எல்.ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராக இருந்தாலும், எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் இருக்க வேண்டும். கடமை தவறாதீர்கள், கண்ணியத்தை இழக்காதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் கூறினார்., மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உடனான சந்திப்பின்போது இவ்வாறு அவர் கூறினார்.
மீன்பிடி தடைக்காலம் தொடங்கவுள்ளதையொட்டி, அனைத்து விசைப்படகுகளும் வரும் 14ம் தேதி இரவுக்குள் கரை திரும்பிட வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் சுதந்திரக் கட்சியின் 14 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், எம்.பி சாந்த பண்டார’ சுயாதீன அணியில் இருந்து திடீரென இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தாவினார். இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்.