ஹரியானா மாவட்டம் அலேவா நகர் பெக்கா கிராமத்தில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு நேற்று பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். அப்போது அதிகாலை 2 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், மருத்துவர்கள் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதுகுறித்து சுகாதார நிலைய பொறுப்பாளர் மருத்துவர் வினோத் கூறுகையில், சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு செல்போன் வெளிச்சத்திலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையும் படியுங்கள்.. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இயக்கம்: 2 மத்திய மந்திரிகள் பயணம்..