
அக்ஷிதா போபைய்யாவின் மாஸ் போட்டோஷூட்
'கண்ணான கண்ணே' தொடரில் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அக்ஷிதா போபைய்யா. நடிக்க வருவதற்கு முன் இவர் மிகவும் பிரபலமான மாடல். மாடலிங் துறையை விட்டுக்கொடுக்காமல் இப்போதும் தொடர்ந்து வருகிறார். கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாமல் அவ்வப்போது நச்சென போட்டோஷூட்களையும் இறக்கி வருகிறார். தற்போது பிங் நிற கோட் ஷூட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மாஸாகவும் அதேசமயம் கவர்ச்சியாகவும் உள்ளது. தமிழில் அழகு சீரியல் மூலம் அறிமுகமான அக்ஷிதா தொடர்ந்து நந்தினி, ஜீ தமிழின் ரெக்க கட்டி பறக்குது மனசு ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.