கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்த விவகாரத்தில், அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன், அமைச்சரும் அவரது உதவியாளர்களும் 40 சதவீதம் வரை கமிஷன் கேட்டதாக சந்தோஷ் பட்டீல் தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு கர்நாடக ஆளுநரிடம் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் பட்டீல் இறப்பற்கு முன் அனுப்பியதாக கூறப்படும் தகவல் பொய்யானது எனவும் இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மாநில பாஜக தலைவரிடம் விளக்கம் தெரிவித்திருப்பதாகவும் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.