நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்
விஜய்
, பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்த
பீஸ்ட்
படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் நெல்சனை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.
பைரவா, புலி கூட பரவாயில்லை போன்று என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பீஸ்ட் குறித்து வரும் விமர்சனங்களை எல்லாம் பார்த்து விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபக்கம் ரஜினி ரசிகர்களோ கவலை மற்றும் பயத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கவலை நியாயமானது தான். பீஸ்ட்டை அடுத்து ரஜினியை வைத்து தலைவர் 169 படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
விஜய்யை வச்சு செஞ்ச மாதிரி தலைவர் படத்தை சொதப்பிவிடுவாரோ என்பதே ரஜினி ரசிகர்களின் பயம். இந்த நெல்சன் திலீப்குமாருக்கு போய் விஜய் எப்படி கால்ஷீட் கொடுத்தார். சரி, நம்ம தலைவர் எப்படி நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்?.
Vijay:பீஸ்ட் பற்றி விஜய் சொன்னது அப்போ புரியல, இப்போ தான் புரியுது
தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கும் நேரத்தில் இப்படி நெல்சன் படத்தில் நடிக்கப் போகிறாரே என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பீஸ்ட்டை வைத்து வரும் மீம்கள் எல்லாம் ரஜினி ரசிகர்களின் கவலையை அதிகரிக்கச் செய்கிறது.