தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நாளை மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கான அழைப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ள டீவீட்டில், “தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம்.
இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல,
ஆனால் நிராகரிக்கத்தக்கது.தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம். @rajbhavan_tn #TamilNadu pic.twitter.com/u9px3cBIH1
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 13, 2022
இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது.” என்று பதிவிட்டிருக்கிறார்.