சட்டப்பேரவை நிறைவு பெற்றவுடன் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முற்பட்டார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அவர் தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முற்பட்டார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், தங்களின் வாகனம் அருகில் இருப்பதாக நினைவூட்டினர். அப்போது, சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? – அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM