மோட்டோரோலா
ஸ்மார்ட்போன் தனது ஜி தொகுப்பில் புதிய மோட்டோரோலா ஜி22 போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. பட்ஜெட் விரும்பிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய குவாட் கேமரா, 5000mAh பேட்டரி திறன், 20W டர்போ சார்ஜிங், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியன சிறப்பம்சங்களாக உள்ளன.
மோட்டோ ஜி22 அம்சங்கள் (Moto G22 Specifications)
மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் 6.5″ அங்குல 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி பஞ்ச் ஹோல் டாட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மலிவு விலை ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் Mediatek Helio G37 Processor நிறுவப்பட்டுள்ளது. GE8230 கிராபிக்ஸ் எஞ்சின் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புராசஸர் பழையது என்றாலும், விலைக்கேற்ற தரத்துடன் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் மெமரி ஆதரவை ஜி22 ஸ்மார்ட்போன் பெறுகிறது.
வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!
மோட்டோ ஜி22 கேமரா (Moto G22 Camera)
மோட்டோ ஜி22 போனில் குவாட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பக்கம் டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் 16 மெகாபிக்சல் f/2.4 செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பேஸ் பியூட்டி போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா உள்ளது.
மோட்டோ ஜி22 பேட்டரி (Moto G22 Battery)
இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, அக்செலெரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
டைப்-சி போர்ட், ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுடன் மோட்டோ ஜி22 போன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 20W பாஸ்ட் சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது.
போன் இன்னும் வெளியாகல; அதுக்குள்ள லீக்கான விலை விவரங்கள்!
மோட்டோ ஜி22 விலை (Moto G22 Price in India)
புதிய மோட்டோ போன், காஸ்மிக் பிளாக், ஐஸ்பெர்க் ப்ளூ ஆகிய இரு வண்னத் தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வேரியன்டின் விலை ரூ.10,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13 ஆம் தேதியான இன்று இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியுள்ளது. இந்தியாவில் Flipkart ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. Flipkart Axis Bank Card வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% விழுக்காடு சலுகை வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஸ்மார்ட்போனை ரூ.10,000க்கு கீழ் வாங்க முடியும்.