சமீப நாள்களாக மெட்டாவெர்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அண்மையில், மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பையும் தமிழக ஜோடி நடத்தி அசத்தியுள்ளது.
மெட்டாவெர்ஸின் அசாதாரண வளர்ச்சி, தற்போது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் ஜூம் காலில் இன்டர்வியூ நடத்தி வந்த நிலையில், தற்போது மெட்டாவெர்ஸ் வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அந்த ட்ரெண்ட் பரவ தொடங்கும் பட்சத்தில், நீங்கள் விர்ச்சுவல் இன்டர்வியூ தளத்திற்கு உங்களை தயார்ப்படுத்த வேண்டும். அங்கு, உங்கள் CVயை வழங்குவதற்கு ஏதுவாக, உங்களை பிரதிபலிக்கும் அவதாரை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Web3 ஸ்டார்ட்அப்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ஒரு சில வழக்கமான தொழில்நுட்ப நிறுவனங்கள் நேர்காணல்களை நடத்துவதற்கும், வெகுமதிகள் மற்றும் அங்கீகாரத் திட்டங்களை ஒழுங்கமைப்பதற்கும், உள்நாட்டில் குழுக்களை ஒன்றிணைப்பதற்கும் AR/VR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
இதுகுறித்து நிறுவனங்கள் கூறுகையில், இந்த முறையை பின்பற்றுவது மூலம் நிறுவனங்களில் புதிதாக இணைவோருக்கு, நிறுவனத்தின் செயல்பாடுகளையும், தொழில்நுட்பங்களையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கிறது. 2 ஆண்டுகளாக வெவ்வெறு இடங்களில் பணியாற்றிய அவர்களை சமூக ரீதியாக ஈடுபாடுடன் ஒன்றிணைப்தற்கான சிறந்த வழி என தெரிவிக்கின்றனர்.
சமூக மெட்டாவர்ஸ் ஸ்டார்ட்அப் ஃப்ளேம், OneAbove அறிமுகப்படுத்தியுள்ளது. இது, மெட்டாவேர்ஸின் வாக்-இன் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் தளமாகும். விர்ச்சுவல் அழைப்பின் அனைத்து அம்சங்களை கொண்டுள்ள இந்த இயங்குதளம் மூலம், பணியாளர்களுடன் உரையாடுவது மட்டுமின்றி ஈடுபாட்டுடன் அவர்கள் இருந்திடும் வகையில் புதிய அனுபவத்தை வழங்கிடும்.
நேர்காணலில் பங்கேற்க விரும்புவோர் இணையதள லிங்கை கிளிக் செய்ததும் உள்ளே நுழைவார்கள். அங்கு, 45 விதமான அவதார் விருப்பங்கள் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்த பிறகு, அவர்கள் HR பிரதிநிதி இருக்கும் விர்சுவல் லாபிக்கு வரவேற்கப்படுவார்கள். அங்கிருந்து, திறமைகளை வெளிகாட்ட இன்டர்வியூ நடைபெற்று பகுதிக்கு, அழைத்து செல்லப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்ப விண்ணப்பத்தாரர்கள் தனித்தனியாக, வெவ்வேறு அறையில் அமர்ந்திருக்கும் துறைத் தலைவர்களுடன் நேர்காணலுக்கு அழைக்கப்படுலாம்.
சுமார் $50,000 முதலீட்டில் 25 பேர் கொண்ட குழுவுடன் கட்டப்பட்ட இந்த விர்சுவல் தளத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFT ஸ்டார்ட்அப்பான கார்டியன் லிங்க், சமீபத்தில் ஒரு Metaverse கட்டிடக் கலைஞரை பணியமர்த்த முன்வந்தது. இதன் மூலம், தொழில்நுட்ப வல்லுநரின் வேலையைச் சரிபார்ப்பது மட்டுமின்றி அவர் உருவாக்கிய இடத்தை ‘உள்ளே’ இருப்பதை விட வேறு மாற்றங்களை பரிந்துரைப்பதற்கான சிறந்த வழியாக கருதப்பட்டது.
HR நிறுவனமான Teamlease இன் மூத்த VP நீதி சர்மா கூறுகையில், பல பணியமர்த்தல் மேலாளர்கள் Metaverse ஐ பணியமர்த்துவதற்கான எதிர்காலமாக பார்க்கிறார்கள். இது குறிப்பாக தொலைதூரத்தில் வேலை செய்பவர்களுக்கு குழு தொடர்புகள், நேர்காணல்கள், புதிய வேலையைக் கண்டறிதல், கூட்டங்கள் மற்றும் குழு நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு தற்போதைய நடைமுறையை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.