1998… அப்போது அவருக்கு வயது 55. சில வருடங்களில் பணி ஓய்வு பெற்று அமைதியான வாழ்வை வாழ நினைத்தவரை உலுக்கியது அந்த நிகழ்வு… திடீரென ஒருநாள் அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஏதாவது சத்துக் குறைபாடாக இருக்கும் என்று விட நினைத்தாலும் நடுக்கம் குறைந்தபாடில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நடுக்கம் மோசமாக, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டார். அவருக்கு வந்திருப்பது மூளை சம்பந்தப்பட்ட பார்க்கின்சன்’ஸ் நோய் (Parkinson’s Disease)!
நிறைய மருத்துவர்களைப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. அன்றாட வாழ்வை வாழ முடியாதவராய் வீல் சேரில் முடங்கிப் போனார். 20 வருடங்கள் ஓடின. 2018-ஆம் ஆண்டு சென்னை கிலெனீகல்ஸ் குளோபல் மருத்துவமனையில் ‘டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன்’ எனும் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. இன்று யார் தயவும் இல்லாமல் தானே நடப்பது மட்டுமின்றி, நடுக்கமின்றி உற்சாகமாக வாழ்ந்து வருகிறார்!
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்…
“20 வருடங்களுக்கு முன்பு பார்க்கின்சன்’ஸ் நோய்க்கு சிகிச்சை வசதிகள் குறைவே. மருந்துகள் மட்டுமின்றி, சரியான மூளை நரம்பியல் நிபுணரை நாடுவதும், DBS எனப்படும் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் முறையும் இன்று பார்க்கின்சன்’ஸ் நோயாளிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை வழங்கியுள்ளன” என்கிறார் கிலெனீகல்ஸ் குளோபல் மருத்துவமனையின் மூத்த நரம்பியல் ஆலோசகர் டாக்டர் சதீஷ் குமார்.
பார்க்கின்சன்’ஸ் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோயாகும். ஆரம்ப காலத்தில் மிகக் குறைந்தளவும், போகப் போக கை கால்களை விறைத்துக்கொள்ளும்படியும் உடலின் அசைவுகளை பொறுமையாக ஆக்கிவிடுகிறது. முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் போவது, நடக்கும்போது கைகள் அசையாமல் இருப்பது, பேச்சில் தாமதம் மற்றும் குழறல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும்.
சிந்திப்பதில் பிரச்னை, மன அழுத்தம், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிக்கல், உணவை விழுங்குவதில் சிரமம், உறக்கத்தில் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல உபாதைகள் பார்க்கின்சன்ஸ் நோய் தீவிரமடையும்போது வரக்கூடும்…
ஆண்களை அதிகம் தாக்குகிறது!
மூளையில் சப்ஸ்டான்ஷியா நிக்ரா (Substantia Nigra) என்ற பகுதியின் உதவியால் டோப்பமைன் எனும் நரம்பியக்கடத்தி (Neurotransmitter) சுரக்கிறது. இது மூளையில் முக்கியமான தகவல்களைக் கொண்டு செல்ல உதவுகிறது. சப்ஸ்டான்ஷியா நிக்ராவில் உள்ள மூளை செல்கள் பழுதுபட்டால் டோப்பமைன் குறைபாடு ஏற்பட்டு உடலில் நடுக்கம் ஏற்படுகிறது.
இந்த நிலை ஏற்படுவதற்கு மரபியல், வயது மூப்பு மற்றும் சிலவகையான சூழல் தூண்டல்கள் காரணங்களாக அமைகின்றன. 55 வயதுக்கு மேல் உள்ளவர்களையே பார்க்கின்சன்’ஸ் அதிகமாக பாதிக்கிறது. மேலும், பெண்களை விட ஆண்களையே இந்த நோய் அதிகம் தாக்குகிறது.
பார்க்கின்சன்’ஸ் பிளஸ் சிண்ட்ரோம் – குழம்ப வேண்டாம்
பார்க்கின்சன்’ஸ் நோயில் பல பிரிவுகள் இருக்கின்றன. பொதுவாக நடுக்கம் வரும் பார்க்கின்சன்’ஸ் நோய்க்கு மருந்து கொடுக்கும்போது நோயாளிகளிடம் நல்ல மாறுதல் காணப்படும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்து, மருந்து கொடுத்ததும் நோயாளிகளிடம் முன்னேற்றம் இல்லை என்றால் அதனை பார்க்கின்சன்’ஸ் பிளஸ் சிண்ட்ரோம் என்கிறோம். இவர்களுக்கு பிசியோதெரபி போன்ற வேறு சிகிச்சைகளே பலனளிக்கும். மூளை ஒரு நுணூக்கமான உறுப்பு என்பதால் அதன் பிரச்னைகளை துல்லியமாகக் கண்டுபிடிக்க தகுந்த நரம்பியல் மருத்துவரை அணுகுவது அவசியமாகிறது.
நிலைகள்…
ஆரம்ப நிலை, மத்திய நிலை மற்றும் தீவிர நிலையாக பார்க்கின்சன்’ஸ் நோயை பிரிக்கலாம். இதில் முதல் நிலைக்கு மருந்துகள் கொடுக்கலாம். இதனால் 7 – 8 வருடங்கள் வரை நல்ல பலன் இருக்கும். அதன் பிறகான நிலைகளுக்கு தேவைப்படும் சிகிச்சைகளை நரம்பியல் மருத்துவரே பரிந்துரைக்க முடியும்.
டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் (DBS)…
சீரற்ற இதயத் துடிப்பை பேஸ் மேக்கர் கருவி கொண்டு சீர்படுத்துவது போல, DBS கருவி மூலம் மூளையின் சப் தலாமிக் நியூக்ளியஸ் (Sub Thalamic Nucleus) எனும் பகுதியைத் தூண்டும்போது பார்க்கின்சன்’ஸ் நோயின் தீவிரம் ஆச்சரியப்படும் வகையில் குறைகிறது.
மூளையின் பிரச்னைக்குரிய இடத்தைத் துல்லியமாக தேர்ந்தெடுத்து அங்கே மின் முனைகள் (electrodes) மூலம் சிறியளவு மின்சாரத்தை செலுத்தி, அந்த இடத்தின் மின்கடத்தலை சீராக்குகிறோம். இதனால் நடுக்கம் இல்லாமல் போகிறது.
எந்த இடத்தில் ஆபரேஷன் செய்து மின் முனைகளை பொறுத்த வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் தேவை. சிடி ஸ்கேன் மற்றும் மிகவும் துல்லியமான எம்.ஆர்.ஐ ஸ்கேனும் இதற்கு தேவைப்படுகிறது. மேலும், துல்லியத்தை அதிகப்படுத்த ஸ்டீரியோடேக்டிக் ஃபிரேம் (Stereotactic Frame) எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனால் மூளையின் பிரச்னைக்குரிய இடத்தை மிகச் சரியாக அணுகி, அங்கே மிக மிக நுண்ணிய ஊசி போன்ற கருவி மூலம் மின் முனைகளை பொருத்த முடிகின்றது. இந்த மின் முனைகளுக்கு ஆற்றல் தரும் பேட்டரிகள் நெஞ்சின் தோலுக்குக் கீழ் பொருத்தப்படுகின்றன.
DBS பலன்கள்…
டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் சிகிச்சையை எடுத்துக்கொள்வதன் மூலம் 10 – 25 வருடங்கள் வரை நோயாளிகள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும்! பார்க்கின்சன்’ஸ் நோய்க்கு மட்டுமல்லாது தீய பழக்கங்கள் மற்றும் டிஸ்டோனியா எனப்படும் தசைத் துடித்தல் பிரச்னைக்கும் இது தீர்வாக அமைகிறது.
இந்த சிகிச்சையை எடுத்த அந்தக் கணமே நல்ல பலன்களைக் காண முடியும். நீண்ட நாள் நோயாளிகள் 2 – 3 மாதங்களில் இயல்பு நிலையை எட்ட முடியும்.
பார்க்கின்சன்’ஸ் நோய்க்கு தீர்வளிக்கும் விதமாக சென்னை கிலெனீகல்ஸ் குளோபல் மருத்துவமனை Comprehensive Parkinson’s Disease Clinic (CPDC)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மூளை நரம்பியல் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் உட்பட அனைத்து மருத்துவ துறை சார்ந்த வல்லுனர்களும் உதவி மருத்துவ ஊழியர்களும் கொண்டு சிறந்த சிகிச்சையை இங்கு பெற முடியும்!
நடுக்கத்தைத் தவிர்ப்போம், நலமுடன் வாழ்வோம்!
அப்பாயின்ட்மென்ட்களுக்கு: 044 – 4477 7000