தமிழகத்தில் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வரும் 14ஆம் தேதி (நாளை) தமிழ் வருட பிறப்பு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் 16ஆம் தேதியும் (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து இன்றும், நாளையும் கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாகவும், சித்திரைத்திருவிழா காரணமாகவும் சென்னையிலிருந்து பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள் என்பது கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.