இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார அவரது அமைச்சில் நேற்று (12) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ,தமது அமைச்சின் விடயதானத்திற்கு உட்பட்டவகையில் மோசடி அல்லது ஊழல்கள் இடம் பெறாதவகையில் பொறுப்புடன் செயல்படுவதாக தெரிவித்த அவர்,
கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறினார்.
சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல்இ நெல்இ தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார நேற்று(11) பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.