உக்ரைனில் 16 வயது மகளை பல நாட்களாக தேடி வந்த அவர் தாயாருக்கு சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட அவரின் சடலம் கிடைத்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய போர் தாக்குதல் 47வது நாளாக நடந்து வருகிறது.
ரஷ்ய துருப்புகள் நாட்டின் பல இடங்களை நாசமாக்கியுள்ள நிலையில் பெண்களை சீரழித்து கொலை செய்யும் கொடூரத்தையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் புச்சாவில் 16 வயது டீன் ஏஜ் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதன்படி கரீனா என்ற 16 வயது டீன் ஏஜ் பெண் ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்டு, தலையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
16 y.o. Karina raped by #Russia soldiers and shot in the head. Her mother’s search for her ended as her tortured body was found in #Bucha pic.twitter.com/SdNS3TwOHG
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 12, 2022
கரீனாவை காணாமல் தொடர்ந்து அவர் தாயார் தேடி வந்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த அழகியப்பெண்ணின் அலங்கோலமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உடல் புச்சாவில் தாயாருக்கு சில மணி நேரத்திற்கு முன்னர் கிடைத்துள்ளது.
இதையடுத்து மகள் சடலத்தை பார்த்து தாயார் கதறி அழுது துடித்துள்ளார்.
இது தொடர்பான தகவலையும், கரீனாவின் புகைப்படத்தையும் உக்ரேனிய எம்.பி லிசியா வசிலிங்கோ வெளியிட்டுள்ளார்.