உக்ரைனில், ரஷ்யப் படைவீரர்கள் மற்றொரு ரஷ்யப் போர் வாகனத்தையே தாக்கி அழிக்கும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் ட்ரோன் ஒன்றினால் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், ரஷ்யப் படையினர் போர் வாகனங்களுடன் Dmytrivka என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருப்பதையும், அப்போது திடீரென அவர்கள் உக்ரைன் ட்ரோன்கள் மற்றும் வீரர்களால் தாக்கப்படுவதையும் காணலாம்.
அந்த தாக்குதலில் 14 ரஷ்யப் போர் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. எட்டு ரஷ்யப் படைவீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்படி திடீரென தாக்கப்பட்டதால் திகிலடைந்த போர் வாகனம் ஒன்றைச் செலுத்திக்கொண்டிருந்த ரஷ்ய வீரர்கள், பதற்றத்தில் தங்கள் நாட்டுப் போர் வாகனம் ஒன்றையே தாக்கியிருக்கிறார்கள்.
ஒரு ரஷ்யப் போர் வாகனம், மற்றொரு ரஷ்ய வாகனத்தாலேயே தாக்கப்படும் காட்சியை வெளியாகியுள்ள வீடியோவில் தெளிவாகக் காணலாம்.
இந்த காட்சி, மார்ச் மாதம் 31ஆம் திகதி, Dmytrivka கிராமத்தில் உக்ரைன் ட்ரோன் ஒன்றினால் படமாக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், ஒருவேளை அந்த போர் வாகனம் இயங்காததால் அதை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட, அதை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே ரஷ்யப் படைவீரர்கள் செய்த செயலாகவும் இந்த தாக்குதல் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.