உக்ரேனில் ரஷ்ய அட்டூழியங்களை விவரிக்க ‘இனப்படுகொலை’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நிராகரித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மக்ரோன், ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் சகோதரர்கள் என்பதால், இதுபோன்ற விஷயங்களில் நான் கவனமாக இருப்பேன்.
இதுபோன்ற சொற்கள் எந்த வகையில் உதவும் என எனக்கு தெரியவில்லை.
இந்த போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட என்னால் முடிந்த அளவிற்கு நான் முயற்சி செய்வேன்.
உக்ரேனியர்களை தடயமே இல்லாமல் சாம்பலாக்கும் ரஷ்யா! உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
இந்த சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இவை போர்க்குற்றங்கள் என்றும் நாம் உறுதியாகக் கூற முடியும்.
நமது ஐரோப்பிய மண்ணில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போர்க்குற்றங்களுக்கு மத்தியில் வாழ்கிறோம் என கூறினார்.
போர்க்குற்றங்களை விசாரிக்க உக்ரைனுடன் பிரான்ஸ் ஒத்துழைக்கும் என குறிப்பிட்ட மக்ரோன், ரஷ்யா ஒருதலைப்பட்சமாக மிகக் கொடூரமான போரைத் தொடங்கியுள்ளது, ரஷ்ய ராணுவம் போர்க்குற்றங்களை இழைத்துள்ளது என்பது இப்போது நிறுவப்பட்டுள்ளது, அதற்குப் பொறுப்பானவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இனப்படுகொலைக்கு சமம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக கூறியது குறிப்பிடத்தக்கது.