உக்ரைனில் ஐரோப்பாவைச் சேர்ந்த கூலிப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய தூதரகங்கள், ரஷ்யா படைகளுக்கு எதிராக சண்டையிட கூலிப்படைகளை பணியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Oleg Syromolotov கூறியுள்ளார்.
புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த Oleg Syromolotov இவ்வாறு கூறினார்.
மேலும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கூலிப்படைகள் ஊடுருவியுள்ளதால் உக்ரைனில் நிலைமை மோசமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இனப்படுகொலை! முதன்முறையாக கூறிய ஜோ பைடன்
சர்வதேச சட்டதை மீறி உக்ரேனிய தூதரங்கள் கூலிப்படைகளை பணியமர்த்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனில் சிரிய கூலிப்படைகளை ரஷ்ய களமிறக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் தற்போது உக்ரைன் மீது ரஷ்ய இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.