உக்ரைனுக்கு 75 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய பின், 170 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை அமெரிக்கா ஏற்கனவே வழங்கி இருக்கிறது.
தற்போது, மேலும் 75 கோடி டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்குகிறது. பீரங்கிகள், கடலோர பாதுகாப்பு ஏவுகணைகள், ரசாயன மற்றும் அணு ஆயுத தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவை உக்ரைனுக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகளில் இது மிக அதிகபட்ச உதவியாகும்.