'எங்கள் நிலம் கொல்லப்படுகிறது' – சுரங்க நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய பிரேசில் பழங்குடிகள்

பிரேசிலில் சுரங்க நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேசில், பொலிவியா, பெரு, ஈகுவேடார், கொலம்பியா, வெனிசுவேலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் அமேசான் காடு பரந்து விரிந்துள்ளது. 40 ஆயிரம் செடி வகைகள், 1,300 பறவை வகைகள், 2,200 மீன் வகைகள், 427 வகை பாலூட்டிகள் அமேசான் காட்டில் உள்ளன. சுமார் 500 வகையான பழங்குடியினர் இக்காட்டில் வசிக்கின்றன.சமீப காலமாகவே சுரங்க நடவடிக்கைகள், காட்டுத் தீ காரணமாக அமேசான் காட்டுக்குள் 20 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு விநாடியிலும் 1.5 ஏக்கர் அளவிலான அமேசான் காடு அழிக்கப்பட்டு வருவதாக ஆய்வாளர்களளும் கூறுகின்றனர்.

இதில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலின் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ உலக அளவில்பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த நிலையில் பிரேசில் அரசைஎதிர்த்து அந்நாட்டு பழங்குடி மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் பிரேசிலில் சுரங்க நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து யானோமாகி பழங்குடிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தங்கள் உடம்புகளில் சிவப்பு நிற மையை ஊற்றிக் கொண்டு பேரணி சென்ற பழங்குடி மக்கள் ’எங்கள் நிலம் கொல்லப்படுகிறது” என்று குரல் எழுப்பிய வண்ணம் பேரணி சென்றனர். இந்தப் பேரணி பிரேசிலியாவில் உள்ள சுரங்க மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் அருகே நடந்தப்பட்டது.

போராட்டத்தில் இளைஞர்கள், சிறுவர், சிறுமியர், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.