நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என விளாடிமிர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் நீடிப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.
போர் சண்டை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகையில், இலக்குகள் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும்.
திட்டமிட்டப்படி ராணுவ நடவடிக்கை நடக்கிறது. இழப்புகளை குறைக்க விரும்புவதால் நாங்கள் வேகமாக நகரவில்லை என தங்கள் வீரர்கள் அதிகளவில் இறப்பதை ஒப்பு கொண்டுள்ளார்.
மேலும், இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தனது முன்மொழிவுகளில் பின்வாங்கியதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. எனவே தாக்குதலை தவிர ரஷ்யாவுக்கு வேறு வழியில்லை என புடின் கூறியுள்ளார்.