சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்தமை, களஞ்சியப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் நேற்றைய (13) தினம் 63 சுற்றிவளைப்புக்களை பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்டனர்.
இதன்போது, ஐயாயிரத்து 690 லீற்றர் பெற்றோலும், ஐயாயிரத்து 620 லீற்றர் மண்ணெண்ணெயும், பத்தாயிரத்து 115 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்தல் மற்றும் களஞ்சியப்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.