ஐபிஎல் : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் உத்தப்பா ,ஷிவம் துபே அரைசதம்

மும்பை,
இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா ,ஷிவம்  துபே இருவரும்  நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் உத்தப்பா ,மறுபுறம் ஷிவம் துபே பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர் .
அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த  இருவரும், அரைசதம் அடித்து அசத்தினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.