வாஷிங்டன்,
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது இந்தியாவின் நீண்ட கால கனவு ஆகும்.
இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க மந்திரிகள் ஆண்டனி பிளிங்கனையும், லாயிட் ஆஸ்டினையும் ேநற்று முன்தினம் சந்தித்து பேசிய பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இது இடம் பெற்றுள்ளது.
அந்த அறிக்கையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும், அணுசக்தி வினியோக குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கும் அமெரிக்கா தனது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது” என்று கூறப்பட்டுள்ளது.