
ஒரு வழியாக வெளியாகிறது ஆச்சார்யா
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், அவரது மகன் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளனர், மணிசர்மா இசை அமைத்துள்ளார், கொரட்டல சிவா இயக்கி உள்ளார்.
சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்திருப்பதாலும், பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாலும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கொரோனா காலத்தில் சிக்கிய பெரிய பட்ஜெட் படங்களில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டு மே மாதம் 13ம் தேதி வெளியாவதாக இருந்த இந்த படம் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு வெளியாகிறது. படம் வருகின்ற 29ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.