பெங்களூரு: மே 25 முதல் ஒரு மாதத்திற்கு அனைத்து அரசு பணிகளையும் நிறுத்த கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஒரு மாதத்துக்கு அரசுப் பணிகளை நிறுத்தப் போவதாக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பன்னா அறிவித்துள்ளார். நீர்வளம், பொதுப்பணித்துறை, சுகாதாரம் ஆகிய துறைகள் ஊழல் மிகுந்த துறைகள் உள்ளன என கெம்பன்னா தெரிவித்தார்.