பெங்களூரு: கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டிலை தற்கொலைக்கு தூண்டியதாக ஈஸ்வரப்பா மீது உடுப்பி போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பா மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை முன்வைத்த சந்தோஷ் பாட்டில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஈஸ்வரப்பா முதல் குற்றவாளியாகவும், அவருடைய உதவியாளர்கள் இருவர் 2வது மற்றும் 3வது குற்றவாளியாகவும், சேர்க்கப்பட்டுள்ளனர். ஈஸ்வரப்பா மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வற்புறுத்தி வரும் நிலையில் தற்போது சந்தோஷ் பாட்டிலை தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் ஏற்கவவில்லை; ஈஸ்வரப்பா பதவி விலகும் வரை மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பது.