காலில் விழுந்தா கையில காசு: பிரபல பாஜக எம்.பி., அடாவடி!

தமிழகத்தில் சித்திரை திருநாள் பண்டிகைபோன்று, அண்டை மாநிலமான கேரளத்தில்
விஷூ பண்டிகை
கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். விஷூ மிகவும் விமர்சையாகவும் பெரிய அளவிலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய விஷுக்கணிக்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது பூஜை அறையில் அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மலர்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்துப் படைக்கின்றனர்.

விஷூ பண்டிகையின் போது, வீட்டில் உள்ள பெரியவர்கள், தாத்தா அல்லது தந்தை வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கைநீட்டம் வழங்குவர். கைநீட்டத்தில் உருளியிலிருந்து நாணயங்கள், கொன்னை மலர்கள், அரிசி மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவர். தங்கம் மற்றும் அரிசியை மீண்டும் உருளியில் வைத்து விடுவர். முன்பெல்லாம், வீட்டிலுள்ள பணியாளர்கள், வயலில் வேலை செய்பவர்கள், வீட்டில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் கை நீட்டம் வழங்குவது வழக்கமாக இருந்தது. இதன் குறிக்கோள் தன் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளுவதும், எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுவதுமே ஆகும்.

தற்போது, விஷூ பண்டிகையின் போது வயதில் மூத்தோர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிறு தொகையை கைநீட்டமாக கொடுத்து வருகின்றனர். கைநீட்ட பணத்தை வெற்றிலையில் வைத்து, கொன்றை மலர்களை சேர்த்து கொடுப்பது ஐதீகம்.

இந்த நிலையில், விஷூகைநீட்டம் என்ற பெயரில் பிரபல மலையாள நடிகரும்,
பாஜக
எம்.பி.யுமான
சுரேஷ் கோபி
பொதுமக்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில் காரினுள் அமர்ந்திருக்கும் சுரேஷ் கோபி, பொதுமக்களுக்கு பணம் கொடுக்கிறார். அவரிடம் வரிசையில் நின்று பணம் வாங்கும் பெண்கள் உள்பட பொதுமக்கள் அவரின் காலை தொட்டு கும்பிடுகின்றனர். அப்போது புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதற்கு அவர் போஸும் கொடுக்கிறார்.

நடிகர் சுரேஷ் கோபி ஆதரவுடன் பாஜக பிரிவு ஏற்பாடு செய்திருந்த விஷூ நிகழ்ச்சிகள் கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, விஷூ தினத்தன்று அர்ச்சனை செய்வதற்காக ‘கைநீட்டம்’ வழங்குவதற்காக மக்களிடம் இருந்து கோயில் பூசாரிகள் பணம் பெறுவதை கொச்சி தேவசம் போர்டு தடை செய்தது. திருச்சூர் வடக்குநாதன் கோயில் பூசாரியிடம் நடிகர் சுரேஷ் கோபி ரூ.1000 கொடுத்ததையடுத்து, அதனடிப்படையில் அவரது பெயரை குறிப்பிடாமல் தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.